மதுக்கரையாள் துணையுடன்
மாயனூர் செல்லாண்டி அம்மன் மதுக்கரை - கரூர்
இவள் தான் மதுக்கரையாள் இவர் தெய்வம் அல்ல மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் என்கிறது புராண குறிப்பு
இருக்குமிடம்
கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் கிருஷ்ண ராயபுரம் தாலுகா மதுக்கரை என்ற மாயனூரில் உள்ளது இந்த கோயில். சுமார் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகள் பழைமையானது என்கின்றனர் நமது முன்னோர்கள். இது காவிரி மற்றும் அமராவதி நதிகள் சந்திக்கும் இடம். இங்குள்ள காவிரி ஆற்றின் அகலம் சுமார் 1.5 கி.மீ ஆகும்.
சிறப்பு
காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இந்த கோயில் . இந்த கோயில் பசுமை நிறைந்த வயல் வெளிகளாலும் தென்னை தோப்பாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு அபிஷேகத்திற்காக காவிரியிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இங்கு தல விருச்சமாக கருதப்படும் மரம் பீப்பல் மற்றும் வேம்பு ஆகும்.
தெய்வங்கள்
இந்த கோயில் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். கருவறையின் பிரதான தெய்வம். செல்லாண்டியம்மன்.
காவல் தெய்வங்கள்
மதுரை வீரன்
காத்தவராயன்
பேச்சியம்மன்
ஆரிய முந்தைய
பாப்பாத்தி
இவர்களுக்கென்று தனி சந்நிதியும் வாயிலின் வெளியில் வெள்ளை குதிரையில் சந்தன கருப்புவும் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர்.
கோவிலின் சிறப்பு
கோவிலின் முதன்மை வாயில் வடக்கு நோக்கி உள்ளது. கீழ் புரவாசலில் 1000 வருடம் பழமையான அரசமரம் உள்ளது இங்குள்ள கடம்ப மரத்தடியில் சிவன் அமைந்திருப்பது மிக சிறப்பு.
கோயிலின் பெயர் காரணம்
சேர ,சோழ ,பாண்டிய மன்னனுக்கு இடையே எழுந்த பரிபாலன தகராறில் மதில் எழுப்பி கரையை கொண்டதால் இது மதில்கரை என்ற பெயரானது. பின்னர் மருவி மதுக்கரை என்று ஆனது.
பூஜை முறைகள்
கோயிலுக்கு சொந்தமான 40 எக்கர் நிலத்தில் வரும் விளைச்சல் கொண்டு அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. பொங்கல்,நெய் போன்ற உணவுகள் மட்டுமே படைக்கப்படுகிறது. கிடா வெட்டுதல், கோழி அறுத்தல் போன்றவை இருந்தாலும் அம்மனுக்கு படைக்கபடுவதில்லை.
திருவிழா
ஆடி 18, மகாசிவ ராத்திரி , நவராத்திரி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
குழந்தை பேறு இல்லாதவர்கள் ஈர உடையுடன் வழிபட்டு தொட்டில் கட்ட குழந்தை பேறு பெறலாம் என்பது ஐதீகம்

Comments
Post a Comment